Tuesday, March 8, 2011

சூப்பர் மகன்!




மு : டேய்!! சுடாலி.... நாந்தேன்... (கையை அசைத்து அழைக்கிறார்)


(து.மு., முவை நோக்கி செல்கிறார்.. அவர் பின்னால் நின்று கொள்கிறார்.)
இங்கிட்டு வா..


(து.மு., மு.வின் முன் சென்று நிற்கிறார்.)


மு: பேச்சுவார்த்தைக்கு போனீகளா??


து.மு: ஆமா ஐய்யா..


மு: கூட்டணி பேசுறதுக்கு இதா இருக்கேன்னு சண்டை போட்டீகளே. இப்போ இந்த கூட்டணியோட நெலமை புரிஞ்சுதா??


து.மு: நல்லாவே புரியுது. நான் செஞ்ச தப்பும் புரியுது... அதுக்கு தண்டனையா இந்த ஆட்டத்த விட்டே போயிரலாம்னு இருக்கேன்


(மு துணுக்குற்று கையைத் தூக்குகிறார்)


மு: என்ன ஆட்டய... ஆட்டய விட்டு போறீகளா??.. ஹ... நடந்ததுக்கு பரிகாரம் தேடாம.. ஆட்டத்த விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை??


து.மு(உடனே): அதுக்காக....


மு: அதுக்காக???


து.மு: அதுக்காக... நடக்கற பிளாக்மெயில பேச்சுவார்த்தைனு நெனைச்சுகிட்டு இருக்கறது முட்டாள்தனம்.


மு: இந்த ப்ளாக்மெயில்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..


து.மு: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன். ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. ஏழு வருஷம் ஆட்டயப்போட்ட இந்த கூட்டணில நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.


மு: ஏழு வருஷம் ஆட்டயத்தான் போட்டோம் ஒத்துக்கறேன். நாப்பது வருஷமா வேல்கம்பையும் அறுவாளையும் தூக்கிக்கிட்டு அண்ணா நாமம் வாழ்க... பெரியார் நாமம் வாழ்கனு சுத்திகிட்டு இருந்த பயக. இந்திராகாந்தி கூட்டுக்கு சீட் வேணும்னு கேட்டப்போ, ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன கூட்டணிய தூக்கிப்போட்டுட்டு சமாதானம் பேச வாடான்னா எப்படி வருவான்?? நீ எல்லாம் படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா.. அங்கே கூட்டிகிட்டு வா.. ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்.. மெதுவாதான் வருவான்....


து.மு: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா?? அதுக்குள்ள நான் தோத்துருவேன் போல இருக்கே!!


மு: போ... தோத்துப்போ.. நான் தடுக்க முடியுமா??... எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் தோக்க வேண்டியதுதான். ஜெயிக்கறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல. ஆனா குடும்பத்துக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு தோத்து போனா அந்த தோல்விக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ... இன்னைக்கு நான் வெதைக்கறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்.. அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா வெத.. நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை... ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.


து.மு: ஆனா இந்த கூட்டணில தொகுதிகளுக்கு பதிலா ஆட்சிப் பகிர்வ ஊத்தற வரைக்கும், எத வெதச்சாலும் வெளங்காதைய்யா.. என்ன விட்டுருங்கையா நான் போறேன்.


மு. ஆவேசமாகி து.மு சட்டையை பிடிக்கிறார்.


பின்பு விடுகிறார்.


மு: (துண்டை தூக்கிப் போட்டுக்கொண்டு, கைக்குட்டை சிறுதுண்டால் மூக்கை உறிஞ்சிக்கொண்டு) நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..


து.மு.: இல்ல...அப்படி இல்லைய்யா...


மு: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன்... ஜெயில்ல இருந்த பிள்ளையாச்சேன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல. இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருபேனா உன்கிட்ட ....ஒரு வார்த்தை... என்ன?... நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன், நீ உன் கடமைய செஞ்சியா?? நீ பெருசா அரசியல படிக்கறதுக்காக இந்த கட்சியை பொன்னா வளைச்சுப்போட்டு அமிச்சோமே.. அந்த பிளாக்மெயில் பயலுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு.. அதுக்கப்புறம் ஆட்டைய விட்டு போ.. கட்சிய வள.. கணக்கு போடு.. பணம் சம்பாரி.. என்ன இப்போ... போயேன்...


து.மு: நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா.. வெளியிருந்தும் செய்யலாம்... நான் போறேன்யா..


மு: போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் குடும்பத்துல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா பொதுச்செயலாளரு?? யார்யா அவரு.. எங்கே ??


பொ.செ ஓடி வந்து பணிவாக : ஐயா..


மு: இங்கேதான் இருக்கியா.. ஐயா யாவாரமா வெளில போறாங்களாம்.. ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. அவருக்கு டிக்கெட் போடு


பொ.செ: ஒரு நாப்பது நாள் சென்று கொடுக்கட்டுங்களா??


மு:ஏண்டாப்பு.. ஒரு நாப்பது நாள் தங்க மாட்டீங்களா??...


பொ.செ.யை அனுப்பி விட்டு து.மு.வை கிட்டே அழைக்கிறார்.


மு: நாப்பது நாள் இருக்க மாட்டீகளா?? என் பையன பக்கத்துலயே வெச்சு பாக்கனும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா??


து.மு: ஐயா நான் இந்த பயலுவலுக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..


மு: உங்களத்தானே நம்பணும்! இந்த இடத்துல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)... போ...


து.மு:போகட்டுமாய்யா??


மு: போ...


து.மு விலகி செல்கிறார்.. போகும்போது வெளியே நீட்டிக்கொண்டிருந்த மெகா பேனர் தடுக்குகிறது.


மு: யப்பா மெல்ல...


து.மு: தட்டி...தட்டிவிட்டு....


என சொல்லிவிட்டு செல்கிறார்


து.மு போவதை மு குனிந்து வாஞ்சையோடு பார்க்கிறார். கொஞ்சம் தொலைவு சென்றதும் து.மு முவை மறைந்திருந்து திரும்பி பார்க்கிறார். மு திரும்பிக் கொள்கிறார்.


அடுத்த காட்சி ஆரம்பமாகிறது....


-----------------------------------------------------------------------------------------
( சூப்பர் மகன் : திரைக்கதை, வசனம், காட்சி எல்லாம் வழக்கம்போல நம்ம டப்பிங் சீன் தான்! )



நன்றி: தினமணி, மார்ச் 6 2011.

No comments: