ரஹ்மானை சந்தித்தது ரொம்ப வித்தியாசமான அனுபவம்! "காதலன்" படம் வந்த புதிதில் அவரை பார்த்தது!அப்போதெல்லாம் முக்கால்வாசி பேர் அவரை திலீப் என்றுதான் கூப்பிடுவார்கள்! நான் முன் குறிப்பிட்ட வட இந்திய பத்திரிக்கை நிருபர், என் சித்தப்பா + நான்! மூவரும் வட பழனியில் உள்ளசுப்பையா நகரில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் வீட்டிற்கு போனோம்!
முதலில் எங்களுக்கு அவர் வீடு தெரியாத்தால் வழியில் விசாரித்துக்கொண்டுதான் போனோம்! பல பேர்களுகு அவர் வீடு தெரியவில்லை (1994-இல்)! ஒரு வழியாகபோய் சேர்ந்தால் வாசலில் பெரிய இரும்பு கேட். Sentry-இல் பல தடியாட்கள் உள்ளே விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்! கடைசியில் நிருபர் தன் அடையாள அட்டையை காண்பித்ததும் உள்ளே விட்டார்கள்!அப்போது அவர் வீட்டில் வரவேற்பறை என்று ஒன்று ஸ்பெஷலாக ஒன்று கிடையாது! அவர் ஆஃபிஸ் ரூமிலேயே காத்திருந்தோம்! நாங்கள் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்! உள்ளே விடும்போதே "அவர் இப்போதான் எழுந்திரிச்சிருக்காரு! கொஞ்சம் வெயிட் பண்ணவேண்டியிருக்கும்!" என்றுதான் சொல்லி அனுப்பினார்கள்! அதனால் அங்கேயே உட்கார்ந்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் ("What a contrast? அங்கே ராஜாகாலை 8:30 - 5:00 வேலை செய்யறார் ஆஃபிஸ் கணக்கா! இங்கே என்னடான்னா திருடன் மாதிரி ராத்திரி வேலைசெய்யறான்" என்றெல்லாம் பேசிக்கொண்டோம்)!
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து குள்ளமாக ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் ஒரு இளைஞன் பச்சை கலர் Lacoste டீ ஷர்ட்டுடன் நீல கலர் ஜீன்ஸுமாக - செருப்பு போட்டுக்கொள்ளாமல் - உள்ளே நுழைந்தான் சாரி நுழைந்தார்! கையை குலுக்கி "நான் தான் ரஹ்மான்!" என்றார்! எங்களுக்கெல்லாம் தூக்கி வாரி போட்டது! அது வரை ஃபோட்டோவில்தான் பார்த்திருக்கிறோம் அவரை! இவ்வளவு குள்ளமா (கவனிக்க: ராஜாவும் குள்ளம்தான்!யுவனும் குள்ளம்தான்!) யதார்த்தமா இருக்கிற ஒருத்தரா தமிழ் இசை உலகை திடீரென்று கலக்கிக்கொண்டிருக்கிறாரா என்று ஒரே ஆச்சர்யம்! அதுவும் சினிமா உலகில் ஒரு ஹிட்டுக்கே பந்தா செய்யும் நிலையில் இந்த ஆள் சர்வசாதரணமாக பேசுகிறார். அதுவும் நுனிநாக்கு ஆங்கிலத்தில்! படித்த ஆளுக்கு இங்கே என்ன வேலை என்றெல்லாம்பிறகு பேசிக்கொண்டோம்! Anyway... அவர் எங்களை உள்ளே கூப்பிட்டுக்கொண்டு போனார்! அதுவும் ஒரு பெரிய ஹால் மாதிரிதான் இருந்தது! நாங்கள் எங்கிருந்து வருகிறோம் ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்டுவிட்டு intercom-இல் யாரையோகூப்பிட்டு எங்களுக்கு காஃபி தரச்சொன்னார்! கொஞ்ச நேரம் பேசிவிட்டு "Interview-ன்னா இன்னொரு நாள் வாங்க!இப்போ எனக்கு வேலை இருக்கு!" என்றார்! எப்போது வருவது என்று கேட்டதற்கு "அடுத்த வாரம் வாங்களேன்!"என்றார்! அடுத்த வாரமும் போனோம்! ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம்! அது பிறகு.......