Tuesday, June 9, 2009

யுவன் ஒரு Ass Hole!

என்னடா இவன் அப்பாவைப் பத்தி எழுதிட்டு பையனைப் பத்தி வேற எழுதப்போறானான்னு தெறிச்சு ஓடறத்துக்கு முன்னாடி....

யாராவது யுவனை நேராகப் பார்த்தால் ஓங்கி பளாரென்று ஒரு அறை விடுங்கள்! இல்லையென்றால், அட்லீஸ்ட் ஒரு ஷூவையாவது வீசுங்க! அந்த பன்னாடை பரதேசிக்கு ஏதாவது புத்தியாவது வரட்டும்!

பின்ன என்னங்க? “பட்டியல்” படத்துல வர்ற “போகப் போக பூமி தெரிகிறதே” பாட்டின் ஆரம்பத்தில் ஒரு Rap பிட்டை வைத்திருப்பார்! “ர்” என்ன, “ன்”! அது "Soul Train"போன்ற ஆல்பத்தில் இருந்து சுட்ட மாதிரி இருக்கும்! அதை விடுங்கள்! சுட்டால் கூட பெரிய விஷயமில்லை! ஆனால் அந்த பிட்டில், ஆங்கில வரிகளில் ச்சும்மா புகுந்து விளையாடியிருப்பான் அவன்! அதில் ஒரு வரியில் “Your ass real fast! Legs like chicken!" என்றெல்லாம் கூட வரும்!
“Ass" என்றால் சுத்தத்தமிழில் “ஆசனவாய்” அல்லது “குண்டி”என்று அர்த்தம்!

சரி, ஏதோ அவனுக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சும்மா இருந்துட்டோம்! ஆனா பாருங்க, “சென்னை 600008” படத்துல, “வாழ்க்கைய யோசிங்கடா” பாட்டை
ரீ-மிக்ஸ் பண்ணியிருப்பான்! அதுலதான் சூட்சுமமே இருக்கு! அந்தப் பாட்டுல, நடு நடுல சும்மா இருக்கட்டுமேன்னு “...த்தா” அப்படின்னெல்லாம் அடிச்சு விட்டிருக்கான்! அதுவும் கடைசீல, பாட்டு முடியும்போது கேட்டீஙகன்னா, பிரேம்ஜி சொல்றான் “This is 2007! Deal with it. Biatch!"! அதாவது, “இது 2007ம் வருஷம்! அப்படித்தான் சொல்லுவோம்! கேட்டுத்தொலைங்கடா பெண் நாய்களா (அல்லது) விலைமாதர்களா”! என்ன தைரியம் அந்தப்
பன்னாடைக்கு?

அய்யா! நான் சின்னப் பையன் இல்ல கொஞ்சம் பெரியவந்தான்! ஆனா, எந்தக் காலத்திலும் யாரும் அந்த மாதிரி கெட்ட வார்த்தைங்கள சொல்ல கூச்சப்படுவாங்க! கஷ்டப்பட்டு கூலி வேலை செய்யும் ஆசாமிகள் கூட தன் பிள்ளைகளை “...தா ..ம்மா” என்று பேசும் கும்பலிடம் சேர்க்கவிடாமல் வளர்ப்பார்கள்! இப்போ என்னன்னா, படிச்ச நாய்களே இப்படி கேவலமா சொல்லிட்டு திரியுதுங்க!

அந்த் கம்முனாட்டிங்க என்னத்தப் படிச்சானுங்களோ?