Monday, June 9, 2008

இசைராசாவுடன் ஒரு சந்திப்பு!

சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன் இசை ஞானியை "சாது" பட ரீ-ரெகார்டிங் (ஏதோ ஒரு மார்கெட்டில் நடக்கும் சீன்! யாரோ கத்தியால் ஒய். விஜயாவை குத்தும் சீன்) நடந்துகொண்டிருக்கும்போதுசந்தித்தேன்! நான், எனது சித்தப்பா மற்றும் ஒரு வட இந்திய பத்திரிக்கை நிருபர் மூவரும் ரிக்கார்டிங்தியேட்டர் வெளியில் உட்கார்ந்துகொண்டிருந்தோம்! ஒரு பிரேக்கின் போது அவர் மூவரையும் கூப்பிட்டனுப்பினார்! நாங்கள் உள்ளே உட்கார்ந்துகொண்டே அவரிடம் பேச்சு கொடுத்தோம்! அந்த பத்திரிக்கை நிருபர் ஆங்கிலத்தில்கேள்விகள் கேட்க நானும் என் சித்தப்பாவும் அதை தமிழில் மொழிபெயர்த்து இ.ஞானியிடம் கேட்க அவர்தமிழில் பதில் சொல்ல மறுபடி நாங்கள் மொழிபெயர்த்து அதை நிருபரிடம் சொன்னோம்!

திடீரென்று எழுந்தவர் மைக்கில் ரிதம் பாக்ஸ் ப்ரோக்ராம்மிங் செய்பவரிடம் டிரம்ஸ் பீட்டை மாற்றச்சொல்லிவிட்டு"அந்த பிட்ட விஜயா மேல போட்டுருங்க!" என்று சொல்லிவிட்டு எங்களிடம் திரும்பினார்! மறுபடி கேள்விகள் பதில்கள்! நாங்கள் இப்படி மாற்றி மாற்றி டிரான்ஸ்லேட் செய்வதை பார்த்து சிரித்தவர் வெளி உலகைப்பற்றி பேச்சை திருப்பினார்! அப்போது நான் சும்மா இல்லாமல் "இவ்வளவு எளிமையா இருக்கீங்களே! என்னால் நம்பவே முடியல!" என்று ஒரே flattering செய்து கொண்டிருந்தேன்! என்ன நினைத்தேனோ தெரியவில்லை அவரிடமே "நாங்க்ள்லாம் உங்களை மொட்டைன்னு தான் அன்புடன் கூப்பிடுவோம்!" என்று சொல்லிவிட்டேன்! பிறகுதான் தெரிந்தது அது எத்தனைசீரியஸ் விஷயம் என்று! அவர் டக்கென்று திரும்பி ஏதேதோ பட்டன்களையெல்லாம் மாஸ்டரில் அமுக்க ஆரம்பித்துவிட்டார்! என் சித்தப்பா என்னை முறைக்க, அந்த பத்திரிக்கை நிருபர் என்னவென்று புரியாமல் எஙகளைப் பார்த்து முழிக்க,நாங்கள் வெளியில் வந்துவிட்டோம்!

அப்புறம் கிடைத்தது டோஸ் எனக்கு சித்தப்பாவிடமிருந்து! அது நடந்து ஒரு வருடம் கழித்து டைரக்டர் பிரியதர்ஷன் கூப்பிட்டார் என்று என் சித்தப்பாவும் அதே பத்திரிக்கைநிருபரும் "சிறைச்சாலை" படத்து ரீ ரெக்கார்டிங் (21 டிராக் D.T.S.) பற்றி பத்திரிக்கைக்கு P.R. கொடுக்க சென்றார்கள்! Guess what? நானும் போனேன்! உள்ளே போகும்போதே என் சித்தப்பா என்னை "Be careful! இல்லன்னா உன்ன நிஜமாவே உதைப்பேன்!" என்று சொல்லித்தான் கூட்டிக்கொண்டு சென்றார்! வெளியில் சுமார் அரை மணிநேரம்வெயிட் செய்துவிட்டு உள்ளே போனோம்! அங்கே இ.ஞானி என்னை ஒரு மாதிரி முறைத்து - ஞாபகம் இருந்ததோஇல்லையோ - பார்த்தார்! P.R. வேண்டுமே! அதனால் சும்மா இருந்தாரோ என்னவோ!

எனக்கு தாகமாக இருந்தது!உள்ளே மாஸ்டர் ரெக்கார்டிங் கன்சோல் ரூமில் இ.ஞானி, ரெக்கார்டிங் இன்ஞினியர் மற்றும் ஒரு பையன் முட்டிதொடும் அளவிற்கு சட்டை போட்டுக்கொண்டிருந்து எதோ ஒரு பட்டனை நோண்டிக்கொண்டிருந்தான்! என் சித்தப்பாவிடம் சொல்லி "அந்த பையன பாத்தா பியூன் மாதிரி இருக்கான்! ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வரச்சொல்லுங்களேன்!" என்று சொன்னேன்! அவ்வளவுதான்! என்னை பார்த்து இ.ஞானி "ஸைலன்ஸ்! இங்கே பேசக்கூடாது! சரியா?" என்று சொல்ல நான் கப் சிப் ஆனேன்! அப்புறம் என்ன மோகன்லால் அடி வாங்கும் சீனைமுழுவதும் முடித்து விட்டு அந்த ரீலை எங்களுக்காக 21 டிராக் DTS இல் re-play செய்து காட்டினார்கள்!

வெளியில்வந்தப்பிறகுதான் என் சித்தப்பா சொன்னார் "அந்த பையன் பியூன் இல்ல! அவந்தான் இ.ஞானியின் பையன் யுவன்!".

எனக்கு பேய் அறைந்தது போல் இருந்தது!