என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் நாங்கள், தி. நகரில் இருந்து நங்கநல்லூருக்கு குடி பெயர்ந்தோம்.. அப்போதெல்லாம் நங்கநல்லூரில் தெருவுக்கு பத்து வீடுகள் இருந்தால் அதிகம்... அதிலும், ஒவ்வொரு வீடும் இரண்டு கிரவுண்ட் லே அவுட்டில் இருக்கும்.. இதனால், வீட்டுக்கு நாலு தென்னை மரம், நாலு மாமரம், பத்து வாழை மரம் வீதம் இருக்கும்... இதில் beauty என்னவென்றால், பல வீடுகளில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிட்டு விடுவார்கள். அப்போதெல்லாம் ("அந்த காலத்தில் எல்லாம்" என்று நான் என்னுடைய கண்ணாடியை கழட்டுவேன் என்று நினைக்காதீர்கள்... இன்னும் அந்த வேளை வரவில்லை..) தண்ணிக்கு பஞ்ஜம் இல்லை என்று நான் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா?
அந்த சிறு வயதில், நான் கேள்விப்பட்டவரை, திருடன் என்றால், உடம்பு பூரா கரியை பூசிக்கொண்டு, ஒரு அரை டிராயர் போட்டுக்கோண்டு இருப்பான் என்று நினைத்துக்கோண்டு இருப்பேன் (நாங்கள் தி. நகரில் இருக்கும்போது திருட்டு பயம் இருந்ததில்லை அதனால் திருடனை visualize செய்து பார்ப்பதை விட ஒரு வேளை திருடனை பார்த்து விடக்கூடாது என்கிற பயத்தினால் வந்த கற்பனையோ என்னவோ). தி. நகரில் இருக்கும்போது பார்த்த traffic இரைச்சலை ந.நல்லூரில் பார்க்க முடியாததால், இரவு ஒன்பது மணிக்கு மேல் இருக்கும் இருட்டைப்பார்த்தும் பயம் வந்தது உண்டு...
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை, மாடி வீட்டு சேது (என்னை விட மூன்று வயது பெரியவன்) பம்பரம் விளையாடிக்கொண்டிருந்த என்னிடம் பக்கத்து தெருவில் மாங்காய் திருடிய ஒருவனை கட்டிப் போட்டு இருப்பதாகவும், ஒரே கூட்டமாக இருப்பதாகவும் சொன்னான். எனக்கோ இங்கேயே உள்ளூர உதறல். ஆனாலும், ஒரு curiosity. போய்த்தான் பார்ப்போமே.. நாம் பார்த்ததே இல்லை.. அப்புறம் எப்போதான் சான்ஸ் கிடைக்கும்? திருடனை கட்டி வேறு போட்டிருக்கிறார்கள் என்றானே சேது. அவனால் நமக்கு ஒரு danger-ம் இருக்காது. அதனால், நாம் போய் பார்த்துவிடுவோம்.. At least, தூரத்தில் இருந்த்தாவது போய் பார்ப்போம் என்று, அப்படியே போட்டபடியே (பம்பரமும் சாட்டையும் காணாமல் போனது வேறு கதை) ஓடினேன்.
அந்த தெருவில் நுழைந்த நான் தெரு முனை வரைக்கும் ஓடினேன்.. எங்கேயாவது கூட்டம் தென் படுகிறதா என்று பார்த்தேன்... ஹ்ம்..ஹூம்.. No திருடன்.... அடப்பாவி சேது போய் சொன்னாயா என்று ஓடிப்போய் கேட்கலாம் என்று தோன்றியது. அப்படி கேட்பதற்க்கு பதிலாக, இன்னோரு முறை அந்த தெருவை நோட்டம் விட்டு double confirm செய்து விடலாம் என்று, இன்னொரு முறை தெருவுக்குள் ஓடினேன்.... இப்போதும் காணோம் திருடனை... சரி போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டது என்று முடிவு செய்து வீட்டிற்க்கு ஓடினேன்.. அப்போது திருடனை பார்க்க முடியாமல் ரொம்ப சோகமாக அம்மாவிடம் போய் சொன்னேன்.. அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள். "அடுத்த வாட்டி இப்படி எங்கியாவது திருடனை புடிப்பா... அப்ப பாத்துக்கலாம்"...
அதற்க்கப்புறம் பல முறை திருடனைப் பார்த்து இருக்கிறேன்.. பல முறை திருடனைப் பிடித்தும் இருக்கிறேன்... ஆனால் நான் நினைத்தைதப்போல் ஒருமுறையும் திருடன் இருந்ததில்லை.
Modern Day திருடர்களை அந்த மாதிரி கற்பனை செய்து பார்த்தேன் ஒருமுறை.. சிரிப்புத்தான் வந்தது....
அது சரி, திருடனை எப்படி Define செய்வது?