Tuesday, June 17, 2008

இசைராசாவுடன் ஒரு சந்திப்பு - தொடர்கிறது!

சாது படத்து ரீ ரெக்கார்டிங் முடிந்த பிறகு இ.ஞானிக்கு என்ன தோன்றியதோ, எங்கள் மூவரையும்அவர் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார் (தி.நகர் முத்தையா முதலி தெரு?)! வாசலில் வாட்ச்மேன் எங்களை உள்ளே விட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்! எங்களுடன் வந்த நிருபர், அவர் தொழிலுக்கு ஏற்ற மாதிரிஒரு ஜீன்ஸ், சந்தன ஜிப்பா மற்றும் தாடியுடன் இருந்ததால் ஓரளவிற்கு எங்களை நம்பிட்டார்! (அது என்ன தெரியவில்லை! தமிழில் பேசினால் உதைக்க வருகிறார்கள்! ஹிந்தியிலோ அல்லது ஒரு மாதிரி"மார்க்கமாக" அல்லது "கோக்கு மாக்காக" இருந்தால் "ஐயா உள்ளதான் இருக்காரு! போய் உக்காருங்க"என்கிறார்கள்! இதே அனுபவம் ஏ.ஆர். ரஹ்மான் வீட்டிலும் கிடைத்தது! அதைப்பற்றி அப்புறம்...)

You won't believe.... மொட்டையின் வீடு முழுவதும் வெள்ளை பெயிண்ட் அடித்து பார்ப்பதற்கே ரம்மியமாகவும் அழகாகவும் இருந்தது! வீடு அவ்வளவு பெரிய ஏரியா இல்லாவிட்டாலும், உள்ளே நிறைய பூச்செடிகள், மரங்கள்!வெளியில் under-arm cricket ஆடலாம்! அவ்வளவுதான் இடம்! எங்களை வெளியில் (portigo/reception area) உட்காரவைத்துவிட்டு உள்ளே intercom செய்தார் காவலாளி! எங்களுக்கு முன்னே ஒரு டேபிளில் மல்லிகை பூ மொட்டுக்களாலேயே கோலம் போடப்பட்டிருந்தது! நடுவில்ஒரு சிறிய மண் பிள்ளையார்! அந்த இடமே மல்லைகை வாசம் அடித்தது! சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு இ.ஞானி வந்து sorry சொல்லிவிட்டு உள் அறைக்கு கூட்டி சென்றார்! உள்ளே இருப்பதை பார்ப்பேனா இல்லை இ.ஞானியிடம் இருப்பதை பார்ப்பேனா? அந்த் அறையில் இசைக்கருவிகள் மற்றும் கடவுள் சிலைகள் (மரத்தில்/terracota-வில்)! ஒரு மணிநேரம் இசையை பற்றி பேசினார் (இந்த காலத்துல situation-க்கு ஏற்ற ராகத்தை யூஸ் பண்ணுவதில்லை). அவரே பாடியும் காட்டினார்! சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்! பிறகு

ஒரு மாதம் கழித்து அவரிடம் போய் Sunday Magazine-இல் வெளிவந்த அவரைப்பற்றிய கட்டுரையை காண்பித்தோம்! ஒரே சந்தோஷம் அவருக்கு! அப்போது யாரோ திருப்பதி லட்டுபிரசாதம் அவருக்கு கொடுத்திருந்தார்கள்! ஒரு தட்டில் இருந்து spoon, spoon-ஆக எங்களுக்கு கொடுத்தார்! பிறகு வேலையில் மூழ்கிவிட்டார்! வெளியில் வந்த பிறகு கங்கை அமரன் ஒரு காரில் வந்து இறங்கி எங்களுக்கெல்லாம் ஒரு நமஸ்காரம் (அது என்ன சினிமாக்காரர்களுக்கே ஒரு டிரேட் மார்க்கோ?) போட்டார். நாங்களும் வெளியில் வந்துவிட்டோம்!

அந்த காலத்தில் மொட்டைக்கு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு ரூம் கொடுத்திருந்தார்கள்! அந்த இடத்திலிருந்து அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு போவதற்கு அவருக்கு மட்டும் ஒரு தனி வழி! தார் போட்ட ஒரு ஒத்தையடிப்பாதை மாதிரி! இரு பக்கமும் மரங்கள்! பார்க்கத்தான் முடியும், போய் நடக்க முடியாது!

நாங்கள் வெளியில் வந்த நேரம் ஒரு பிரேக் விட்டிருக்கிறார்கள் போல! எல்லா இசைக்கலைஞர்களும் தத்தம்கார்களில் (ஆமாம்! each one had a car! some had Premier 118NE! I saw the lead violinist driving this car! அப்போது மொட்டையின் troop-இல் இருந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 5000 சம்பளம்! இது வெறும் minimum! அவர் கூடவே இருந்த வி.எஸ். நரசிம்மனுக்கு மாதச்சம்பளம்! உள்ளே உட்கார்ந்துகொண்டு வாசிப்பவர்கள் ராகம் தப்பக்கூடாதென்று கண் மூடி கேட்டுக்கொண்டே இருப்பார்/இருந்தார்!) வெளியில் போனார்கள்! பிறகு விசாரித்ததில் அன்று extra call sheet ஆனதால் இரவு 8.30 மணிவரை ரிக்கார்டிங் உண்டு என்று கல்யாணம் (அவர் அஸ்ஸிஸ்டண்ட்) சொன்னார்!

நாங்கள் எங்கள் காரில் ஏறும் முன்பு பார்த்தோம் மொட்டை அவர் தனி வழியில் தன் ரூமுக்கு போவதை! அதையும் photo எடுத்து நிருபர் வைத்துக்கொண்டார்!

இப்போது எப்படி தெரியாது! அவரிடம் இருக்கும்போது அவருக்கு ஒரு aura இருப்பதை உணர முடிந்தது! He was making a presence. Not an extra word. Not an extra smile! Not an extra emotion! Not an extra expression!I felt the same with A.R. Rahman! Will write about it tomorrow!

Friday, June 13, 2008

தசாவதாரம் - திரைப்பட விமர்சனம்

நான் பார்த்தவரை படத்தில் இருந்த பத்து அவதாரங்கள்:

1. காமிரா. அபாரமோ அபாரம்! Latest technique-களை உபயோகப்படுத்தி தெருவில் இருந்து கட் ஆகாமல்வீட்டுக்குள் அதுவும் கிரில் கம்பிகளுக்குள் பயணம் செய்யும் உத்தி புதுசோ புதுசு!

2. கிராஃபிக்ஸ். ஆங்கிலப்படங்களுக்கு இணையில்லாக இருந்தாலும் அற்புதமோ அற்புதம்!

3. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ். இதுவும் இந்தியாவிற்கு புதுசுதான்.

4. பல்ராம் நாயுடு... இந்த கேரக்டரில் கமல் அடிக்கும் லூட்டிகள் அதுவும் ஏர்போர்ட்டில் "சாதா" கமலைinterrogation செய்யும் சீனில் தான் தியேட்டரே நிமிர்ந்து உட்கார்ந்தது!

5. ராமானுஜ தாசன். கமல் நிஜமாகவே கடவுளை நம்புகிறவராக இருந்தால் இப்படித்தான் இருப்பார்! அற்புதம்!என் மனைவி சொன்னாள் "பொன்னியின் செல்வன்" கதையில் வரும் ஆழ்வார்க்கடியன் மாதிரி இருக்கிறார் என்று!

6. ஆசின். இவர் படத்தில் நடிப்பதே தெரியாமல் seamless-ஆக characterization + acting இருந்திருக்கிறது!

7. பூவராகன். இவர் கதாபாத்திரமும் படத்தில் நன்றாக இருக்கிறது! Body language + accent கலக்கல்!

8. அந்த பெருமாள் சிலை

9. ஹெலிகாப்டர்

10. படம் பார்க்கும் நாம்

Monday, June 9, 2008

இசைராசாவுடன் ஒரு சந்திப்பு!

சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன் இசை ஞானியை "சாது" பட ரீ-ரெகார்டிங் (ஏதோ ஒரு மார்கெட்டில் நடக்கும் சீன்! யாரோ கத்தியால் ஒய். விஜயாவை குத்தும் சீன்) நடந்துகொண்டிருக்கும்போதுசந்தித்தேன்! நான், எனது சித்தப்பா மற்றும் ஒரு வட இந்திய பத்திரிக்கை நிருபர் மூவரும் ரிக்கார்டிங்தியேட்டர் வெளியில் உட்கார்ந்துகொண்டிருந்தோம்! ஒரு பிரேக்கின் போது அவர் மூவரையும் கூப்பிட்டனுப்பினார்! நாங்கள் உள்ளே உட்கார்ந்துகொண்டே அவரிடம் பேச்சு கொடுத்தோம்! அந்த பத்திரிக்கை நிருபர் ஆங்கிலத்தில்கேள்விகள் கேட்க நானும் என் சித்தப்பாவும் அதை தமிழில் மொழிபெயர்த்து இ.ஞானியிடம் கேட்க அவர்தமிழில் பதில் சொல்ல மறுபடி நாங்கள் மொழிபெயர்த்து அதை நிருபரிடம் சொன்னோம்!

திடீரென்று எழுந்தவர் மைக்கில் ரிதம் பாக்ஸ் ப்ரோக்ராம்மிங் செய்பவரிடம் டிரம்ஸ் பீட்டை மாற்றச்சொல்லிவிட்டு"அந்த பிட்ட விஜயா மேல போட்டுருங்க!" என்று சொல்லிவிட்டு எங்களிடம் திரும்பினார்! மறுபடி கேள்விகள் பதில்கள்! நாங்கள் இப்படி மாற்றி மாற்றி டிரான்ஸ்லேட் செய்வதை பார்த்து சிரித்தவர் வெளி உலகைப்பற்றி பேச்சை திருப்பினார்! அப்போது நான் சும்மா இல்லாமல் "இவ்வளவு எளிமையா இருக்கீங்களே! என்னால் நம்பவே முடியல!" என்று ஒரே flattering செய்து கொண்டிருந்தேன்! என்ன நினைத்தேனோ தெரியவில்லை அவரிடமே "நாங்க்ள்லாம் உங்களை மொட்டைன்னு தான் அன்புடன் கூப்பிடுவோம்!" என்று சொல்லிவிட்டேன்! பிறகுதான் தெரிந்தது அது எத்தனைசீரியஸ் விஷயம் என்று! அவர் டக்கென்று திரும்பி ஏதேதோ பட்டன்களையெல்லாம் மாஸ்டரில் அமுக்க ஆரம்பித்துவிட்டார்! என் சித்தப்பா என்னை முறைக்க, அந்த பத்திரிக்கை நிருபர் என்னவென்று புரியாமல் எஙகளைப் பார்த்து முழிக்க,நாங்கள் வெளியில் வந்துவிட்டோம்!

அப்புறம் கிடைத்தது டோஸ் எனக்கு சித்தப்பாவிடமிருந்து! அது நடந்து ஒரு வருடம் கழித்து டைரக்டர் பிரியதர்ஷன் கூப்பிட்டார் என்று என் சித்தப்பாவும் அதே பத்திரிக்கைநிருபரும் "சிறைச்சாலை" படத்து ரீ ரெக்கார்டிங் (21 டிராக் D.T.S.) பற்றி பத்திரிக்கைக்கு P.R. கொடுக்க சென்றார்கள்! Guess what? நானும் போனேன்! உள்ளே போகும்போதே என் சித்தப்பா என்னை "Be careful! இல்லன்னா உன்ன நிஜமாவே உதைப்பேன்!" என்று சொல்லித்தான் கூட்டிக்கொண்டு சென்றார்! வெளியில் சுமார் அரை மணிநேரம்வெயிட் செய்துவிட்டு உள்ளே போனோம்! அங்கே இ.ஞானி என்னை ஒரு மாதிரி முறைத்து - ஞாபகம் இருந்ததோஇல்லையோ - பார்த்தார்! P.R. வேண்டுமே! அதனால் சும்மா இருந்தாரோ என்னவோ!

எனக்கு தாகமாக இருந்தது!உள்ளே மாஸ்டர் ரெக்கார்டிங் கன்சோல் ரூமில் இ.ஞானி, ரெக்கார்டிங் இன்ஞினியர் மற்றும் ஒரு பையன் முட்டிதொடும் அளவிற்கு சட்டை போட்டுக்கொண்டிருந்து எதோ ஒரு பட்டனை நோண்டிக்கொண்டிருந்தான்! என் சித்தப்பாவிடம் சொல்லி "அந்த பையன பாத்தா பியூன் மாதிரி இருக்கான்! ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வரச்சொல்லுங்களேன்!" என்று சொன்னேன்! அவ்வளவுதான்! என்னை பார்த்து இ.ஞானி "ஸைலன்ஸ்! இங்கே பேசக்கூடாது! சரியா?" என்று சொல்ல நான் கப் சிப் ஆனேன்! அப்புறம் என்ன மோகன்லால் அடி வாங்கும் சீனைமுழுவதும் முடித்து விட்டு அந்த ரீலை எங்களுக்காக 21 டிராக் DTS இல் re-play செய்து காட்டினார்கள்!

வெளியில்வந்தப்பிறகுதான் என் சித்தப்பா சொன்னார் "அந்த பையன் பியூன் இல்ல! அவந்தான் இ.ஞானியின் பையன் யுவன்!".

எனக்கு பேய் அறைந்தது போல் இருந்தது!