அவனவன் கொரியப் படத்திலேருந்தும் இரானியப் படத்திலேருந்தும் கதைய உருவி உல்டா பண்ணி கொத்து பரோட்டா போடறானுங்கோ! இயக்குனர் சுசி கணேசனுக்கு என்ன கொணஷ்டை என்று தெரியவில்லை! சிங்கத்தின் தலைய சீப்பால வாருரேன்னு சொல்லி மொக்கையான ஒரு கதையை அதுவும் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்குள் வந்த தமிழ்ப்படங்களிலேருந்தே கதையை சுட்டு ஒரு ஆஃப் பாயில் பண்ணியிருக்காரு!
இந்த விமர்சனத்தை படிப்பதற்குள் வலையில் பலபேர் கதையை சொல்லியிருப்பார்கள்! அதனால் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறேன்! தவிரவும் அப்படி ஒன்றும் சிலாகிக்கிற கதையும் இல்லை! புதிதாகவும் இல்லை! 20% ஜெண்டில்மேன், 20% ரமணா, 20% அந்நியன், 20% சிவாஜி, 20% சாமுராய் படங்களோட கதையை நல்லா மிக்சியில் ஒரு ஆட்டு ஆட்டி அதில் ஏடாக வந்த ஒரு கதைதான் கந்தசாமி!
ஸ்ரேயாவுக்கு முன்னழகு இருந்ததோ தப்பித்தார்! இல்லெங்கில், பல சீன்களில் பாப் கட் செய்து கொண்டு பையன் மாதிரி வருகிறார்! தவிரவும் அவருக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸ் வயதுக்கு வரும் சிறுவனைப் போலவும் இருந்தது! சொல்லப்போனால் விக்ரம் தப்பித்தார்! இல்லாட்டி, கந்தசாமி ஹோமோவோ என்று பேஜாராகி இருந்திருப்போம்!
படத்தில் கடைசியில் (கடைசியிலாவது) பிரபுவிடம் ஒருவர் சொல்கிறார் “அந்த ஒன்பது பேரும் சந்திப்பதே இல்லை!” என்று! ஆனால், படத்தில் காட்சிக்கு காட்சி நாம் பார்க்கும்போதெல்லாம் சந்திக்கிறார்கள்! தவிரவும் சி.பி.ஐ. என்றால்அடுத்தவரை மட்டுமே உளவு செய்யும் என்று சொல்லியிருப்பது இன்னொரு அபத்தம்! அதே போல், தடுக்கி விழுந்தால் ஸ்ரேயா விக்ரமின் ஆஃபிசுக்குள் நுழைகிறார், என்னமோ நம்ம சினிமா ஆசாமிகள் மு.க.வைப் பார்ப்பதுபோல!
படத்தில் கந்தசாமி பறப்பதை லாஜிக்கலாக சொல்கிறேன் பேர்வழி என்று அதையும் ஜோக்காகி இருக்கிறார் சுசி! ஹீரோ மெக்சிகோ போகிறார்! ஆனால், ரஜினி மாதிரி “தரையிலே கால் படாமல்” ஹெலிகாப்டரிலேயே பறக்கிறார்! திடீர் திடீரென்று யார் யாரோ வருகிறார்கள்! சுடுகிறார்கள்! சாகிறார்கள்! ஹீரோவின் கண்ணை கட்டி உதைக்க வருகிறார்கள்! ஆனால் கண் தெரியாமல் இருக்கும் ஹீரோ சரியாக நகர்ந்துகொள்கிறார்! உதைக்க வரும்நபர்கள் மட்டும் சரியாக காற்றில் உதைவிட்டு விழுகிறார்கள்! நம் ஹீரோவுக்கு மட்டும் ஒன்றுமே ஆவதில்லை! போங்கடாங்.................
வடிவேலு இண்ட்ரோ ஆகும் சீனில் மக்கள் சிரிக்கிறார்கள்! அப்போது மட்டும்தான் சிரிக்கிறார்கள்! மற்ற வடிவேலு சீன்களில் கப்சிப்! ரூட்ட மாத்து மாப்பு! இல்லேன்னா உனக்கும் வெச்சிடுவோம் ஆப்பு!
சாதாரணமாய் பாடல்களின்போதுதான் மக்கள் வெளியில் போவார்கள்! இந்தப்படத்தில் சண்டைக் காட்சிகளின்போது கூட வெளியில் போவதை பார்க்க முடிந்தது!
இசை தேவி ஸ்ரீபிரசாத்! ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன! மனிதருக்கு டிரம்ஸ் என்ற ஒரு கருவிமேல் ரொம்பவே மோகம் போல! போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியிருக்கிறார்! படத்துக்காகவே ஒரு 100 டிரம்ஸ் செட்கிழிந்திருக்கும்போல!
முக்கியமான ஒன்றை சொல்லவேண்டும்! DTS என்று ஒரு அருமையான டெக்னிக்கல் விஷயத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கிய ஆளுக்கு தண்டனையாக இரண்டு காதிலும் 500 டெசிபலுக்கு குறையாமல் ஹெட்ஃபோனில்நாராசமாக பாடல்களை ஒலிபரப்ப கடவது!
அடுத்த முறை திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு போனால் “சாமி! இந்த மாதிரி மொக்கைப் படத்தை எடுப்பவனுக்கு தண்டனையா இதே படத்தை நான் ஸ்டாப்பாக 1000 முறை பார்க்க வை”ன்னு சீட்டு எழுதிப் போடலாம்னு இருக்கேன்!
அறைகுறையான அளவில் கலந்த மசாலா, அளவு குறைந்த கதை, ஏகத்துக்கு சதை, மொத்ததில் ரொம்ப வதை என எல்லாத்தையும் போட்டு கிண்டின வஸ்து! மொத்ததில் கந்தசாமி, அடுப்புல வெந்த சாமி!