போன மாதம் ஒரு நாள் நான் ஆஃபிஸ் போய்க்கொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு ரேடியோ ஸ்டேஷனை ட்யூன் செய்தேன்! சாதாரணமாக தமிழ் சினிமா பாட்டுக்கள்தான் கேட்டுக்கொண்டு போவேன்! அன்று ஏதோ ஒரு நினைப்பில் ரேடியோ போட்டேன்!
அப்போது அந்த ஸ்டேஷனில் லோக்கல் ந்யூஸ் என்று ஆரம்பித்தார்கள்! பிறகு ஆர்.ஜே.க்கள் அவர்களுக்குள்ளேயே ஜோக் அடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்!அப்போது ஒருவர் சொன்னார் டல்லாஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் (ஹை ஸ்கூல் என்பது நம்மூர் +1 +2 மாதிரி)! சீனியர்கள் (+2 படிப்பவர்கள்) இனிமேல் செல் ஃபோன் எடுத்துக்கொண்டு போகக்கூடாது! குறிப்பாக வகுப்புக்குள் செல் ஃபோன் அனுமதியில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள்! கூடவே அந்தப் பள்ளியில் படிக்கும் சீனிய்ரகளையும் பேட்டி எடுத்ததை ஒலிபரப்பினார்கள்!
இதில்தான் காமெடியே! ஒரு மாணவன் “இது அநியாயம்! அக்கிரமம்! செல் ஃபோன் இல்லையென்றால் எங்கள் அப்பா அம்மாவிற்கு நான் எங்கே இருக்கிறேன் என்று எப்படி சொல்வது?”என்று கேட்டான்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! போகட்டும்! அடுத்து வந்த ஒரு மாணவி சொன்னதுதான் காமெடி! “அய்யோ! எனக்கு கடிகாரத்தில் மணி பார்க்கவே தெரியாது! செல் ஃபோனில் மட்டும்தான் மணி பார்க்கத்தெரியும்! இனிமேல் நான் எப்படி மணி பார்த்து வீட்டுக்குப் போவேன்?” என்று கேட்டாள் பாருங்கள்!
இது இப்படி இருக்கிறதா? அந்தப் பள்ளியின் லைப்ரரியில் ந்யூஸ் பேப்பர்கள் வரவழைத்து படிக்க வைக்கப் போகிறார்கள் என்று ந்யூஸ் சொல்லிவிட்டு அது ஏன் என்றால் மாணவர்களிடம்படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதற்காக என்றும் சொன்னார்கள்! அதைப் பற்றி ஒரு சீனியர் மாணவன் சொன்னது “அடக் கடவுளே! ந்யூஸ் பேப்பரில் செய்தியெல்லாம் கச்சாமுச்சாவென்று இருக்குமே! தவிரவும் அதைப் பக்கம் பக்கமாக புரட்டவேண்டுமே? அதன் ஃபார்மேட்டே தப்பு! அது எனக்கும் பிடிக்காது!” என்று சொன்னான் பாருங்கள்!
ஆர்.ஜே.க்களுடன் ரேடியோ கேட்டுக்கொண்டிருந்த நானும் விழுந்து விழுந்து (காரை விட்டு அல்ல) சிரித்தேன்!