சில நாட்களுக்கு முன் கே. டி.வியில் ஸ்பைடர்மேன் பார்ட்-1 (தமிழில்) போட்டார்கள்! சாதாரணமாக தமிழ்ப் படுத்தப்பட்ட ஆங்கிலப் படங்களை பார்ப்பதில்லை! இருந்தாலும், அதற்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன் தான் நான் ஸ்பைடர்மேன் சீரீஸ் - மூன்று படங்களையும் - டி.வி.டி.யில் பார்த்திருந்தேன்! அதனால் மனதில் ஒரு குறுகுறுப்பு! எப்படித்தான் தமிழ்ப்படுத்துகிறார்கள் என்று பார்த்தேன்!
Long story short..... ஒரு சீனில் ஸ்பைடர்மேன் அவன் காதலியை காப்பாற்றுவான். அவளுக்கு ஸ்பைடர்மேன் தான் பீட்டர் பார்க்கர் என்று தெரியாமல் முத்தம் கொடுப்பாள்! இதில் என்ன தமாஷ் என்றால், அந்த முத்தக்காட்சியை கட் பண்ணிவிட்டார்கள்! அது பெரிய விஷயமில்லை!
ஆனால், கந்தசாமி படத்திலிருந்து “திரை மின்னல்கள்” நிகழ்ச்சியில் சில காட்சிகளை வெளியிடுகிறார்கள்! அதில் ஸ்ரேயா கண்டபடி உடைகளை கிழித்துக்கொண்டு கத்துவார்! அதற்கெல்லாம் சென்சார் கிடையாதாம்! அதே மாதிரி ”மியாவ் மியாவ்” பாட்டு போடுகிறார்கள்! அதெல்லாம் பக்திப் பாடல்களோ? என்ன எழவோ?
-----------------------
அதே மாதிரி, போனவாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயக சதுர்த்தி! அன்று டி.வி.யில் நிகழ்ச்சிகள் எல்லாம் “சிறப்பு விடுமுறை”க்காகவாம்! ஆனால், இன்று ஓணம் பண்டிகைக்கு மட்டும் ஸ்பெஷலாக “ஓணம் பண்டிகையை” முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்!
சொந்த ஊரில்தான் தாத்தாவுக்கு கெட்ட பெயர்! அட்லீஸ்ட் பக்கத்து ஊரிலாவது நல்ல பெயர் எடுப்போம்னு கெளம்பிட்டார் போல!
-----------------------
திருவாளர் ப்ரேவ் பெல் இன்று தன் பத்திரிக்கையில் ஓணம் பத்திரிக்கையைப் பற்றி வறுத்தெடுத்துவிட்டார்! அதாவது ஓணம் பிறந்த கதை எல்லாம் கட்டுக்கதை! அதெல்லாம் பார்ப்பனர்களின் கைவேலை என்றெல்லாம் எழுதியிருக்கிறார்!
On a side note, தாத்தா இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவித்துவிட்டார்! அடடா, அப்படியென்றால் தாத்தாவும் ஒரு பார்ப்பனரா? இல்லை பார்ப்பனர்களின் அடிவருடியா?
ரொம்பத்தான் brave, ப்ரேவ் பெல் அவர்கள்!
------------------------