Monday, June 1, 2009

(ரொம்ப நாளைக்கப்புறம்...) சர்தார்ஜி ஜோக்குகள்!

ஒரு சர்தார்ஜி வங்கிக்குப் போய் அக்கவுண்ட் ஒப்பன் பண்ண போயிருக்காரு! அப்ளிக்கேஷன் ஃபாரத்தவாங்கிக்கினு படிச்சு பாத்துட்டு நேரா டில்லிக்கு போயிட்டாராம்! ஏண்டான்னு கேட்டா, ஃபாரத்துல“FILL IN CAPITAL’ அப்படீன்னு போட்டுருக்கேன்னாரு பாருங்க..........

-----------------------------

பங்களூரு மாரத்தான் போட்டி நடக்குற சமயம் அந்தப் பக்கமா போன நம்ம சர்தார்ஜி என்ன ஏதுன்னுகேட்டாராம்! அப்போ அங்க இருந்தவங்க “ரேஸ் போட்டில கலந்துக்கறாங்க! தெரியுமா ஜெயிச்சா ஒரு லட்ச ரூபா பரிசாம்!” அப்படீன்னாங்களாம்! அதுக்கு நம்ம ஆளு “அப்போ ஏன் எல்லாரும் ஓடறாங்க?ஜெயிக்கிறவங்க மட்டும் ஓடினா போதாதா”ன்னு கேட்டாராம்!

-------------------

நம்ம சர்தார்ஜி ஒரு நாளைக்கு வேலைக்காரனை கூப்பிட்டு தோட்டத்துக்கு தண்ணி ஊத்தச்சொன்னாராம்!அதுக்கு அந்த வேலைக்காரன் “எஜமான்! வெளில மழை பெய்யுது”ன்னானாம்! அதுக்கு நம்ம ஆளுஎன்ன சொன்னாரு தெரியுமா? “இருக்கட்டுமே! குடைய பிடிச்சிக்கினு தண்ணு ஊத்து”!

---------------------

கோழியா! முட்டையா? கேள்விக்கு நம்ம சர்
தாரோட பதில் என்ன தெரியுமா? எத ஃபர்ஸ்ட்டு ஆர்டர் பண்றீங்களோ அதான் வரும்!

----------------

கம்ப்யூட்டர் கத்துக்கிட்ட சமயம் நம்ம சர்தார் ஒரு நாளைக்கு வேர்ட் பிராசஸஸரில் எதையோ டைப்அடிச்சாரு! ஆனா அதுல தப்பு வந்துடுச்சு! இவரு என்ன பண்ணாரு தெரியுமா? “வைட்னர்” (whitener) போட்டு எல்லா எழுத்தையும் மானிட்டர்லேருந்து அழிச்சிட்டாரு!

-------------------

ஒரு நாளைக்கு நம்ம சர்தார்ஜி எண்ணை வாங்கப்போயிருக்காரு! வாங்கிட்டு கடைக்காரன் கிட்டே ஒரேவிவாதம்! “இது கூட ஃப்ரீயா ஏதாவது குடுங்க”ன்னு! என்ன ஏதுன்னு விசாரிச்சா எண்ண டப்பாவுலபோட்டுருந்ததாம் “கொலஸ்ட்ரால் ஃப்ரீ” அப்படீன்னு!

--------------------

ஒரு (லூசுப்) பெண் நம்ம சர்தார்ஜியைப் பார்த்து ரொம்ப பிடிச்சிப்போய் கல்யாணம் கட்டிக்கச் சொன்னாளாம்!அதுக்கு நம்ம ஆளு “எங்க ஃபேமிலியில சொந்தக்காரங்களைத்தான் கட்டிக்கிவோம்” அப்படீன்னாராம்!அதுக்கு அவ எப்படீன்னு கேட்டாளாம்! அதுக்கு நம்ம ஆளு “எங்க அப்பா எங்க அம்மவத்தான்கட்டிக்கிட்டாரு! எங்க தாத்தா எங்க பாட்டியத்தான் கட்டிக்கிட்டாரு! எங்க மாமா என் அத்தையத்தான்கட்டிக்கிட்டாரு. அதனாலதான்” அப்படீனாராம்!

-----------------

சர்தார்ஜி: “என்ன கண்ணாலம் கட்டிக்கோங்க டியர்”
மாலா: “ஐய்ய்யயோ! நான் உங்கள விட ஒரு வருஷம் பெரியவ”
சர்தார்ஜி: “அதனால என்ன? அடுத்த வருஷம் கட்டிக்கறேன்”

--------