Monday, August 31, 2009

தி. நகர் அதாவது மாம்பலம்!

நேற்று தினமணி பத்திரிக்கையில் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்ற தலைப்பில் சுமார் நூறு வருடங்களில் மெட்ராஸ் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, அதுவும் திருவல்லிக்கேணியை எப்படிஆங்கிலேயன் தன் கைப்பிடிக்குள் உருவிக்கொண்டான் என்பது முதற்கொண்டு எழுதியிருந்தார்கள்!

அதைப் படித்ததும், எனக்கு தி.நகர் தான் ஞாபகத்துக்கு வந்தது! நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தி.நகரில் தான்! சுமார் 12 வயது இருக்கும்போதுதான் தி. நகரை விட்டு ந.நல்லூருக்குவந்தோம்! நான் சிறு சிறுவனாக இருந்தபோது தி. நகர்தான் எல்லாமே எனக்கு! நான் மட்டும் அல்ல என் அக்காக்கள் அனைவருக்கும் தி. நகர்தான் ஞாபகத்துக்கு வரும்! அவர்களை விடுங்கள்! என் சித்தப்பாககள் அவர்களின் இளமைப் பருவத்தில் ஆட்டம்போட்டது எல்லாமே தி. நகர் தான்!

அதிலும் என் தாத்தா நாற்பதுகளின் தொடக்கத்திலேயே தி. நகருக்கு வந்துவிட்டாராம்! அவர் கட்டிய முதல் வீடு பனகல் பார்க் எதிரில் இருந்தது! இப்போது “பிரமாண்டமாய்” இருக்கும்சரவணா ஸ்டோர்ஸ் இருந்த இடத்தில் தான் ஒரு பெரிய பங்களா இருந்தது! மார்வாடிக்கு சொந்தமானது! அந்த மார்வாடியும் என் தாத்தாவும் நண்பர்கள்! நண்பனுக்கு வீட்டை கட்டிக் கொடுப்பதற்கு சொல்ப சம்பளம் தான் வாங்கினாராம் தாத்தா! அதற்கு பிரதியுபகாராமாய் துரைசாமி பாலத்தின் அருகில் ஓரிரண்டு கிரவுண்டுகள் வாங்கித் தருகிறேன் என்றாராம்அந்த மார்வாடி! அதற்கு என் தாத்தா “அடப் போடா! இந்த இடத்துல எவண்டா வீடு கட்டுவான்?” என்றாராம்!

அவர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருந்தது! 40’களில் தி. நகர் உஸ்மான் ரோட்டில் ஆள் அரவம் இருக்காதாம்! அங்கே இங்கே என்று ஓரிரண்டு வீடுகள்! சீனிவாச்சாரி மருத்துவமனை இருந்தது (ராமனாதன் தெருவுக்கு பக்கத்தில்)! பிறகு அதற்குப் பக்கத்தில் சாரதா வித்யாலயாவின் (ராமகிருஷ்ண மடம்) சிறுவர் பள்ளி இருந்தது! அதை விட்டால் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் தான்! உஸ்மான் ரோட்டின் இரு பக்கத்திலும் மரங்கள் இருக்குமாம்! அங்கே பொழுது சாய்ந்த பிறகு யாரும் போக பயப்படுவார்களாம்!

இப்போது சொல்லுங்கள்! அங்கே மனை வாங்குவது ஒரு “திகில்” கிளப்பும் விஷயமாகத்தானே இருந்திருக்கும் என் தாத்தாவுக்கு? அதே மாதிரி, பழைய மாம்பலத்தில் ஒரு ஏரி இருந்ததாம்! அதனாலேயே அங்கு கொசு ரொம்பவே அதிகமாம்! துரைசாமி சப்வே வருவதற்கு முன்னால் அங்கு ரயில்வே கேட் தான்! என் தாத்தா “பழைய மாம்பலத்தில் எல்லாம் எப்படித் தான் மக்கள் வசிக்குறாங்களோ?” என்று நொந்து கொள்வாராம்!

அதற்குப் பிறகு ஐம்பதுகளில் சென்னை பிக்கப் ஆகும் சமயத்தில், கோடம்பாக்கம் பிரசித்தி பெறத்துவங்கியது! அப்போது ரங்கராஜபுரம் ஏரியாவில் மனை வாங்கச்சொன்னபோது, “அங்கே எல்லாம் எவன் போக முடியும்? மழைக் காலத்தில் மாட்டு வண்டி சேற்றில் மாட்டிக்கும்! நான் அங்கேயெல்லாம் வீடு வாங்கமாட்டேன்” என்றெல்லாம் உதார்விட்டு கடைசி வரை வாடகை வீட்டில் வாடகை கொடுக்கமுடியாமல் உயிர் விட்டார்!

சொல்லப்போனால், எழுபதுகளில் கூட, துரைசாமி ரோட்டில் நாங்கள் போக மாட்டோம்! அங்கே ஒரே இருட்டாக இருக்கும்! ஆறு மணிக்குப் பிறகு “ஓ” வென்று இருக்கும்! தவிரவும், அங்கே ஒரு விறகுக் கடை இருந்தது! என்னமோ எங்களுக்கு விறகுக் கடை மேல் ஒரு பயம்! அதனால் பகலிலேயே அந்தப் பக்கம் போகாமல் எதிர் வாடையில் நடப்போம்!

அதே போல, வெங்கடநாராணா ரோட்டில் சாதாரணமாகவே போகமாட்டோம்! அப்போதெல்லாம், சாலையின் இரு பக்கமும் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும்! அதனால் பகலிலேயே வெளிச்சம் இருக்காது! அதுவே ஒரு அமானுஷ்யமாக தென்படும் எங்களுக்கு! வீடு! இல்லை ராமகிருஷ்ணா ஸ்கூல்! இதுதான் எனக்கு அப்போதெல்லாம்!

இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேனே? பனகல் பார்க்கின் வடக்குப் பகுதியான (கோடம்பாக்கம் ரோட்டை இணைக்கும் உஸ்மான் ரோட்டின் ஸ்ட்ரெட்ச்) இடத்தில் “ஓ” வென்று இருக்கும்! நான் ஸ்கூலில் படித்தபோது என் கூட படித்த ஒரு ஸ்னேகிதியின் வீடு அங்கேதான் இருந்தது! அவளின் சகோதரியும் என் அக்காவின் கிளாஸ்மேட் ஆதலால், அவ்வப்போதுபோய் வருவோம்! எங்கே என்றால், தற்போது “இசை ஞானி” என்று சொல்லப்படும் “மொட்டையின்” வீடு இருக்கிறதே முருகேச முதலி தெரு! அங்கேதான்! சாரதா ஸ்கூலில் இருந்துஒரு இரண்டு நிமிஷம் நடந்தால் அவர்கள் வீடு வந்துவிடும்! ஆனால், அதற்கே ஒரே ஓட்டமாக ஓடுவோம்! தவிரவும் அங்கே ஒரு பெரிய்ய்ய தூங்கு மூஞ்சி மரம் இருந்தது! அதை கணக்காக எடுத்துக்கொண்டு இரண்டு மூச்சில் ஓடிப்போய்விட்டு வருவோம்! ஏன் அந்த மரத்தடியில் ரெஸ்ட் என்றால், அங்கே ஒரு பெட்டிக் கடை இருந்தது! தவிரவும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நபர்கள் எல்லாம் அந்தக் கடை வாசலில்தான் டீ குடித்துக்கொண்டு இருப்பார்கள்! அதனால் ஒரு சேஃப்டி!

இப்போது என்னடானா, உஸ்மான் ரோட்டில் நடந்து போவதற்கே மூச்சு வாங்குகிறது! தி. நகரை நகை வாங்குவதற்கு ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார்கள்! அதை விடுங்கள்! மாம்பலம் என்பதையே தி. நகர் என்று மாற்றிவிட்டாரக்ள்!

Tuesday, August 25, 2009

வெந்த புண்ணுக்கு கொஞ்சம் மருந்து போடுவோமா? கண்டிப்பாக 18+ ஒன்லி!

அடுப்புல வெந்த சாமியைப் பாத்துட்டு என் நண்பன் நேத்து ஃபோன் பண்ணி “என்னடா தூங்கும்போதெல்லாம் ஒரே விஷ்க் விஷ்க்குன்னு கனவுல சத்தமா வருது”ன்னு பொலம்பினான்! எனக்கு அந்த அளவுக்கு பாதிப்பு இல்லைன்னாலும் ஓரளவுக்கு சரி செய்யலாம்னு தோணிச்சு! அதான் இந்தப் பதிவு!


கொஞ்சம் இம்போர்ட்டட் சரக்குதான்! எக்குத்தப்பா இருக்கும், ஜாக்கிரதை!

----------------------------
மூணு அமெரிக்கா காரங்க சவுதிக்குப் போனாங்களாம்! அங்கே பாலைவனத்தில் நடந்து போயிட்டிருக்கும்போது ஒரு பெரிய மாளிகை கண்ணுல பட்டதாம்! உள்ளே போய் விசாரிச்சா ஒரு ஷேக்கோட அந்தப்புரமாம்! சும்மா ஒரு 100 ராணிங்க இருந்தாங்களாம் அங்க! நம்ம ஆளுங்களுக்கு ஒடனே பரபரன்னுச்சு! உள்ளே போய் பொண்ணுங்களை நோட்டம் விட ஆரம்பிச்சிட்டானுங்க! அதுக்குள்ள காவலாளிங்க மூணு பேரையும் பிடிச்சு கட்டிப்போட்டு வெச்சிட்டாங்க! அப்போதான் ஷேக்கு உள்ளே நுழையறாரு கொலை வெறியோட!

இந்த மூணு பேரைப்பத்தி விசாரிச்சதும் வெறி ஜாஸ்தியாயுடுச்சு அவருக்கு!
ஒவ்வொருத்தருக்கும் தண்டனைய புதுமையா தரணும்னு முடிவு பண்ணாரு ஷேக்கு! மொதல் ஆசாமிய கூப்பிட்டு “என்ன வேலைல பாக்குறே” அப்படீன்னுருக்காரு! அதுக்கு அவன் போலிஸ் வேலைல இருக்குறதாச் சொன்னான்! ஒடனே ஷேக்கு அந்தப்புரத்துல இருக்குற ஒரு ராணிய கூப்பிட்டு அவனுக்கு “அந்த” இடத்துல சுட்டுக்கொல்லணும்னு உத்தரவு போடறாரு!

அடுத்த ஆசாமிய கூப்பிட்டு இதே கேள்விய கேக்க, அவன் தான் ஃபையர் சர்வீஸ்ல இருக்கேன்னுருக்கான்! ஒடனே அவரு அவனுக்கு “அந்த” இடத்துல நெருப்பால எரிச்சு கொல்லணும்னு இன்னொரு ராணிய கூப்பிட்டு உத்தரவு போடறாரு!

கடைசியா இருந்தவன் இதெல்லாத்தையும் பாத்துட்டு கெக்கெ பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தான்! ஷேக்குக்கு கோவம் பொத்துட்டு வந்தது! “என்னடா திமிரா? சாகப்போற உனக்கு சிரிப்பா இருக்குதா”ன்னு கேக்குறாரு! அதுக்கு அவன் சொல்றான்!

“நான் லாலி பாப் சேல்ஸ் பண்றேன்”!

--------------------------------------

நம்மாளுங்க மூணு பேரு செத்தப்புறம் மேல் லோகத்துக்கு போறானுங்க! வாசல்ல எல்லா பேத்தையும் செக் பண்ணிட்டிருக்கிற சித்திரகுப்தன் மூணு பேரையும் விசாரிக்கிறான்! மொதல் ஆசாமிய பாத்து “நீ எப்படி? மனைவிக்கு துரோகம் செஞ்சியா” அப்படீன்னு கேக்குறாரு (அவருக்குத்தான் நோட் புக்குல எல்லா விஷயமும் இருக்குன்னு அதிகப் பிரசங்கித்தனமா கேக்கக்கூடாது! அப்புறம் இந்த ஜோக்குக்கு அர்த்தமே இருக்காது சாமி!). அதுக்கு அவன் “நான் கடைசி வரைக்கும் வேற பொண்ண ஏறெடுத்தும் பாக்கல! மனைவி செத்தப்புறம் கூட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைன்னா பாத்துக்கோங்க!” அப்படீங்கறாரு! ஒடனே சித்திரகுப்தன் சொர்க்க வாசல தெறந்து ”உள்ளே போங்க! அதோ நிக்குதே லம்பார்க்கினி! அத எடுத்து சொர்க்கத்துக்குள்ளே ஓட்டி எஞ்ஜாய் பண்ணுங்க” சொல்லி அனுப்பிடறாரு!

அடுத்த ஆசாமிய இதே கேள்வி கேக்க அவரு அதுக்கு “நான் சின்ன வயசு! அப்படி இப்படீன்னு இருந்துட்டேன்! ஆனா கடைசி காலத்துல மனைவி மேல ரொம்ப அன்பா இருந்தேன்” அப்படீங்குறாரு! ஒடனே சி.கு. கேட்டத் தெறந்து உள்ளே இருக்கும் ஒரு அம்பாசடரை எடுத்துக்கோங்க! சொர்க்கத்துல ஓட்டி எஞ்ஜாய் பண்ணுங்க” சொல்லி அனுப்பிடறாரு!

மூணாவதா வந்த ஆசாமிய இதே கேள்விய கேக்க அவன் ஜூ.வி.யில் வரும் “இவர்தான் உங்கள் ஹீரோவில்” வரும் ரேஞ்சுக்கு தன்னோட லீலைகள சொல்றாரு! சி.கு.க்கு ஒரே கோவம்! ஒரு ஓட்டை உடைசல் சைக்கிள கொடுத்து இதுதான் உனக்கு சொர்க்கத்துக்குள்ள ட்ரான்ஸ்போர்ட்ன்னு சொல்லி அனுப்பிடறாரு!

கொஞ்ச நாள் கழிச்சு சி.கு. ரவுண்ட்ஸ் போகும்போது லம்பார்க்கினி ஆசாமிய பார்க்குறாரு! அவன் என்னடான்ன வண்டிய ஓட்டி எஞ்ஜாய் பண்ணாம டிக்கிக்கு மேல ஒக்காந்துட்டு அழுதுட்டு இருந்தானாம்! ஏண்டா ஒனக்குத்தான் நல்லவண்டிதானே கொடுத்திருக்கேனே! அப்புறமும் ஏண்டா அழுவுறேன்னு சி.கு. கேட்டாராம்! அதுக்கு அவன் சொன்னான்:

“என் பொண்டாட்டி இப்பத்தான் ஸ்கேட்டிங் பண்ணீட்டு போறத பார்த்தேன்!”

----------------------------------------------------

குட்டிப்பய கோவிந்து ஸ்கூல் விட்டு வீட்டுக்குள்ளே நுழையறான்! தாவிப் பிடிச்ச அம்மாக்காரி என்னடா ரொம்ப சோகமா இருக்கேன்னு கேக்குறாங்க! அதுக்கு கு.கோ. “காத்தால பஸ்ல போகும்போது அப்பா நான் ஒக்காந்துட்டு இருக்குற சீட்ட ஒரு பொண்ணுக்கு கொடுக்கச் சொல்லிட்டாரு” அப்படீன்னு சொல்றான்! அதுக்கு அம்மாக்காரி “அதுல என்னடா தப்பு? பொம்பளைங்களுக்கு இடம் தந்தா தப்பில்லையே” சொல்றா! கோவிந்து கோவமா மொகத்த வெச்சிக்கிட்டு “அப்பா சொன்னது அவரோட மடி” அப்படீன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான்!

---------------------------------------------------

“என்ன டார்லிங் நம்ம மேரேஜ் சர்ட்டிஃபிக்கேட்டையே நாலு மணிநேரமா பாத்துட்டு இருக்கீங்க! அதுல என்ன இருக்கு?” அப்படீன்னு பொண்டாட்டி கேக்குறாங்க! அதுக்கு கோவாலு சோகமா “எல்லாம் இருக்கு இதுல! ஆனா எக்ஸ்பைரி டேட் போட்டுருக்கானான்னு பாக்குறேன்”!

-----------------------------------------------------

Monday, August 24, 2009

கந்தசாமி! அடுப்புல வெந்த சாமி!

அவனவன் கொரியப் படத்திலேருந்தும் இரானியப் படத்திலேருந்தும் கதைய உருவி உல்டா பண்ணி கொத்து பரோட்டா போடறானுங்கோ! இயக்குனர் சுசி கணேசனுக்கு என்ன கொணஷ்டை என்று தெரியவில்லை! சிங்கத்தின் தலைய சீப்பால வாருரேன்னு சொல்லி மொக்கையான ஒரு கதையை அதுவும் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்குள் வந்த தமிழ்ப்படங்களிலேருந்தே கதையை சுட்டு ஒரு ஆஃப் பாயில் பண்ணியிருக்காரு!

இந்த விமர்சனத்தை படிப்பதற்குள் வலையில் பலபேர் கதையை சொல்லியிருப்பார்கள்! அதனால் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறேன்! தவிரவும் அப்படி ஒன்றும் சிலாகிக்கிற கதையும் இல்லை! புதிதாகவும் இல்லை! 20% ஜெண்டில்மேன், 20% ரமணா, 20% அந்நியன், 20% சிவாஜி, 20% சாமுராய் படங்களோட கதையை நல்லா மிக்சியில் ஒரு ஆட்டு ஆட்டி அதில் ஏடாக வந்த ஒரு கதைதான் கந்தசாமி!

ஸ்ரேயாவுக்கு முன்னழகு இருந்ததோ தப்பித்தார்! இல்லெங்கில், பல சீன்களில் பாப் கட் செய்து கொண்டு பையன் மாதிரி வருகிறார்! தவிரவும் அவருக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸ் வயதுக்கு வரும் சிறுவனைப் போலவும் இருந்தது! சொல்லப்போனால் விக்ரம் தப்பித்தார்! இல்லாட்டி, கந்தசாமி ஹோமோவோ என்று பேஜாராகி இருந்திருப்போம்!

படத்தில் கடைசியில் (கடைசியிலாவது) பிரபுவிடம் ஒருவர் சொல்கிறார் “அந்த ஒன்பது பேரும் சந்திப்பதே இல்லை!” என்று! ஆனால், படத்தில் காட்சிக்கு காட்சி நாம் பார்க்கும்போதெல்லாம் சந்திக்கிறார்கள்! தவிரவும் சி.பி.ஐ. என்றால்அடுத்தவரை மட்டுமே உளவு செய்யும் என்று சொல்லியிருப்பது இன்னொரு அபத்தம்! அதே போல், தடுக்கி விழுந்தால் ஸ்ரேயா விக்ரமின் ஆஃபிசுக்குள் நுழைகிறார், என்னமோ நம்ம சினிமா ஆசாமிகள் மு.க.வைப் பார்ப்பதுபோல!

படத்தில் கந்தசாமி பறப்பதை லாஜிக்கலாக சொல்கிறேன் பேர்வழி என்று அதையும் ஜோக்காகி இருக்கிறார் சுசி! ஹீரோ மெக்சிகோ போகிறார்! ஆனால், ரஜினி மாதிரி “தரையிலே கால் படாமல்” ஹெலிகாப்டரிலேயே பறக்கிறார்! திடீர் திடீரென்று யார் யாரோ வருகிறார்கள்! சுடுகிறார்கள்! சாகிறார்கள்! ஹீரோவின் கண்ணை கட்டி உதைக்க வருகிறார்கள்! ஆனால் கண் தெரியாமல் இருக்கும் ஹீரோ சரியாக நகர்ந்துகொள்கிறார்! உதைக்க வரும்நபர்கள் மட்டும் சரியாக காற்றில் உதைவிட்டு விழுகிறார்கள்! நம் ஹீரோவுக்கு மட்டும் ஒன்றுமே ஆவதில்லை! போங்கடாங்.................

வடிவேலு இண்ட்ரோ ஆகும் சீனில் மக்கள் சிரிக்கிறார்கள்! அப்போது மட்டும்தான் சிரிக்கிறார்கள்! மற்ற வடிவேலு சீன்களில் கப்சிப்! ரூட்ட மாத்து மாப்பு! இல்லேன்னா உனக்கும் வெச்சிடுவோம் ஆப்பு!

சாதாரணமாய் பாடல்களின்போதுதான் மக்கள் வெளியில் போவார்கள்! இந்தப்படத்தில் சண்டைக் காட்சிகளின்போது கூட வெளியில் போவதை பார்க்க முடிந்தது!

இசை தேவி ஸ்ரீபிரசாத்! ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன! மனிதருக்கு டிரம்ஸ் என்ற ஒரு கருவிமேல் ரொம்பவே மோகம் போல! போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியிருக்கிறார்! படத்துக்காகவே ஒரு 100 டிரம்ஸ் செட்கிழிந்திருக்கும்போல!

முக்கியமான ஒன்றை சொல்லவேண்டும்! DTS என்று ஒரு அருமையான டெக்னிக்கல் விஷயத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கிய ஆளுக்கு தண்டனையாக இரண்டு காதிலும் 500 டெசிபலுக்கு குறையாமல் ஹெட்ஃபோனில்நாராசமாக பாடல்களை ஒலிபரப்ப கடவது!

அடுத்த முறை திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு போனால் “சாமி! இந்த மாதிரி மொக்கைப் படத்தை எடுப்பவனுக்கு தண்டனையா இதே படத்தை நான் ஸ்டாப்பாக 1000 முறை பார்க்க வை”ன்னு சீட்டு எழுதிப் போடலாம்னு இருக்கேன்!

அறைகுறையான அளவில் கலந்த மசாலா, அளவு குறைந்த கதை, ஏகத்துக்கு சதை, மொத்ததில் ரொம்ப வதை என எல்லாத்தையும் போட்டு கிண்டின வஸ்து! மொத்ததில் கந்தசாமி, அடுப்புல வெந்த சாமி!

Tuesday, August 11, 2009

கமல் 50.....

இன்று கமல் திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது! கமலின் நான்ஸ்டாப் இன்னிங்க்ஸுக்கு என்ன காரணம் என்று யோசிக்கவே தேவையில்லை! கீழே எழுதியிருக்கும் நிகழ்ச்சியை படித்தாலே கமலின் வெற்றிக்கு காரணத்தை புரிந்து கொள்வீர்கள்!

என் மாமனார் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நாடகத்தில் நடித்திருக்கிறார்! எண்பதுகளில் தூர்தர்ஷன் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்! இத்தனைக்கும் அவர் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் நல்ல ஒரு ஸ்டெனோ வேலையில் இருக்கும்போது பார்ட் டைமாக நடித்தது!
சுமார் 30-35 ஆண்டுகாலம் ஒரு துறையில் இருந்திருக்கிறாரென்றால் அனுபவத்திற்கு என்ன குறைச்சல் என்று நீங்கள் கேட்கலாம்! இல்லை நீங்கள் கேட்காவிட்டாலும் நான் விடுவதாக இல்லை! பின்னே? அவனவன் ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோ ஜாவா கோவா என்று ஏதேதோ ஜல்லியடித்துவிட்டு அமெரிக்காவிற்கோ அல்லது பன்னாடை sorry பன்னாட்டு கம்பெனிக்கோ வேலைக்கு போகிறார்கள்! அப்படி போனவர்களே கும்மி அடிக்கும்போது நம்மாளுக்குஎன்ன குறைச்சல்?

ஓ.கே.! முதலில் அவர் கூட நடித்தவர்களைப் பற்றி கொஞ்சம்!அறுபதுகளில் அவர் பல நாடகங்களில் நடித்திருந்தாலும், வி.எஸ். ராகவனின் ட்ரூப்பில்தான் நிறைய குப்பைகொட்டியிருக்கிறார்! (பல படங்களில் ஜட்ஜாக வந்து "சட்டத்த எப்படி கூண்டுல நிறுத்தமுடியும்? What are you talking?" என்று ஹீரோக்களைப் பார்த்து வசனம் பேசுவாரே, அவரேதான்!)

இவர் கூட நடித்தவர்களில் முக்கியமானவர் கமல்! அட, நம்ம கமல் ஹாசன் தான்! அப்போது கமலுக்கு 14-15 வயது இருக்கும்! வருஷம் 68-69 என்று வைத்துக்கொள்ளுங்களேன்! கமலுக்கு அப்படி என்ன நாடகத்தின்மேல் மோகமோ இல்லை நன்றாக படிக்கச்சொல்லி வற்புறுத்துவார்களோ என்று தெரியவில்லை! படிக்கக்கூட போகாமல் நித்தம் டிராமா டிராமா என்று அலைவானாம் ஸாரி அலைவாராம்!கமல் என்ன என் மாமனார் மாதிரி சும்மாவா? அப்பா சேர்த்துவைத்த சொத்து! போதாக்குறைக்கு அண்ணன்கள் வேறு! குடும்பமே வக்கீல் குடும்பமாதலால் பயங்கர வசதி! தினமும் டிராமாவுக்கோ ரிஹர்சலுக்கோ காரில்தான் வருவாராம்! அதுவும் எப்படி? தன் அண்ணன்கள் யாராவது ஒருவர் தினமும் காரில்தான் கொண்டுவிடுவார்களாம்!Anyway, காரில் வந்தாலும் கமல் அலட்டமாட்டாராம்! ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்வாராம் சக நடிகர்களுக்கு!பலமுறை கமலின் அண்ணன் சந்திரஹாசன் கமலை கொண்டுவிடும்போதெல்லாம் சக நடிகர்களிடம் - என் மாமனார் உட்பட -சொல்வாராம் "சார்! இவன் படிக்காம டிராமா டிராமான்னு அலையறான்! நீங்கதான் இவனுக்கு புத்திமதி சொல்லி படிக்க சொல்லணும். இல்லன்னா உருப்படாம போயிடப்போறான்".அவர்களும் சொல்வார்களாம்! கமல் அதையெல்லாம் கேட்டுக்கொள்ளாமல் இருந்துவிடுவாராம்!

ஒரு முறை என் மாமனார் ஏதோ இப்படி சொல்லப்போக, கமல் ஒரு response கொடுத்தாராம் "மாமா! நீங்களெல்லாம் என்ன ரொம்ப கிண்டல் பண்றீங்க! ஒரு நாள்இல்லை ஒரு நாள் நீங்க சொல்ற இந்த கமலஹாசன் 'ஆல் இண்டியா ஃபேமஸ் கமல் ஹாசன்' (ல்-இல்லில் ஒரு அழுத்தம்) ஆகப்போறேன் பாருங்க! அப்ப சொல்வீங்க".

இப்போது சொல்லுங்கள்! இன்னும் ஒரு ஐம்பது தாங்குவாரா மாட்டாரா கமல்?