ஒற்றைப் பொரி!
பின் மதிய நேரத்தில்வெள்ளைக்காரியின் பசிக்கு
பொரித்து போடப்பட்ட சோளங்கள்
அவளும் சாப்பிட்டு அனைவரும் கை
அள்ளியதில் மிச்சமந்த ஒற்றைப் பொரி
அநாதை விடுதி குழந்தையின்
“என்னை தத்தெடுத்துக்கொள்ளேன்”
ஏக்கமிகு பார்வையில்!
கூச்சம்
“ஹாய்! திஸ் இஸ் ஆண்டர்சன் ஹியர்”
“திஸ் இஸ் சாண்ட்ரா ஸ்பீக்கிங்”
“மை நேம் இஸ் மைக்கேல்”
கால் செண்டர் பொய்களில் பழகாத
ஹெட் ஃபோன்கள் இனிமேலும்
சகிக்க முடியாத கூச்சத்தில்!