Friday, December 14, 2007

சண் டீ.வி.!

சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது, என் வீட்டில் சன் டீ.வி. இன்ஸ்டால் செய்து.. எங்கள் ஊரில் சன் டீ.வி. வந்து ஏழுவருடங்கள் ஆன போதிலும், அதை இன்ஸ்டால் செய்வதற்க்கு எனக்கு இரண்டு வருடங்கள் பிடித்தது.
முதலில் - 2000-ஆம் வருடம் என்று ஞாபகம் - என் நண்பன் ஒருவன் சன் டீ.வி. போட்டிருப்பதாகவும் வேண்டுமென்றால் வந்து பார்க்கும்படியாகவும் சொன்னான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக தமிழ் டீ.வி.யை கண்ணால் பார்க்காததால், விழுந்தடித்துக்கொண்டுஅன்று இரவே ஓடினேன் (sorry, காரில் போனேன்). என்ன ஆச்சர்யம்.... அவன் வீட்டு டீ.வி.யில் தமிழ் படம் ஓடிக்கொண்டு இருந்தது.பிளாக் அண்ட் வைட் டீ.வி.யை பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென்று கலர் டீ.வி.யை பார்த்தால் இருக்கும் ஆச்சர்யம்/உற்சாகம் etc.எனக்கு தொற்றிக்கொண்டது. அவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்ததில், டிஷ் ஆண்டென்னா ஒன்றை இன்ஸ்டால் செய்தால்மட்டும் போதும், சன் டீ.வி. பார்ப்பது ஈஸி என்றான். சரி, அந்த ஆண்டென்னாவை காட்டுடா என்றேன்.... அவன் அபார்ட்மெண்டின்patio விற்க்கு அழைத்து சென்றான். அந்த பால்கனி சுவரில் அந்த டிஷ் தொங்கி கொண்டிருந்தது. சரி இவ்வளவு ஈஸியான விஷயத்தைவிட்டு வைக்கக்கூடதென்று, அடுத்த நாளே டிஷ் கம்பெனியை கூப்பிட்டேன்.

டிஷ் கம்பெனிக்காரன் வந்து என் அபார்ட்மெண்டை நோட்டம் விட்டு, Apartment Leasing Office-க்கு போனான். ஐந்து நிமிடங்கள் கழித்து வந்து ஒரு பேப்பரில் எதையோ எழுதி, அதை apartment leasing manager -இடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வரச்சொன்னான்.இதானே.. ஜுஜுபி என்று ஓடினேன்... போன வேகத்திலேயே திரும்பி வந்தேன். அவனை முதல் வேலையாக போய்ட்டு வா, அப்புறம் லெட்டர் போடுறேன் என்று சொல்லாத குறையாக விரட்டி அடித்து வீட்டு சோஃபாவில் உட்கார்ந்து யோசித்தேன். என்னடா இது, வீட்டின்எந்த இடத்திலேயும் ஓட்டை போடக்கூடாது என்கிறான். அப்படி இல்லையென்றால் ஃபைன் போடுவேன்; மீறி வைத்தால், evict செய்துவிடுவேன்என்று சொல்லிவிட்டார்களே.. என் சன் டீ.வி. ஆசை நிராசையாக போய்விட்டதே என்று சோகமாக யோசித்து, வேறு option இல்லாததால் அந்த ஐடியாவை மூட்டை கட்டிவைத்தேன். அப்புறம் அதை மறந்தேவிட்டேன்.

அதற்கு பிறகு, சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, வேறு ஒரு அபார்ட்மெண்டிற்க்கு குடியேறினேன். இந்த காலகட்டத்தில், அபார்ட்மெண்டுகள் occupants இல்லாமல் சிங்கி அடித்துக்கொண்டிருந்தது.. அதனால் apartment manager என்னிடம் ஒரு பேப்பரை கொடுத்து அதில் டிஷ் ஆண்டென்னா எப்படியெல்லாம் இன்ஸ்டால் செய்தால் ஃபைன் கட்டாமல் தப்பிப்பது என்று படங்களை வரைந்து பாகங்களை குறிக்காத குறையாக சொன்னாள். ஆஹா... என்னுடைய மறந்து போன காதல் திரும்பவும் வந்தது!
நானே ஒரு டிஷ் ஆண்டென்னா ஒன்றை Sears-இல் வாங்கிக்கொண்டு வந்தேன்... ஒரு ரெண்டு மூணு நாளைக்கு அதை எப்படி வைக்கலாம் (கான்கிரீட் ரொப்பிய சிமெண்ட் பக்கெட்டில் வைக்கலாமா இல்லை தரையில் ஒரு மரக்கட்டையை நட்டுவைக்கலாமா) என்றுமூளை நட்டு கழலும் அளவுக்கு யோசித்துவிட்டு, இதுக்கு மேல் வேலைக்கு ஆகாது என்று, Yellow Pages-இல் ஒரு வெள்ளைக்காரனைகூப்பிட்டு - அவனுக்கு $75 கொடுக்கவேண்டுமாம் - கூப்பிட்டு, தயவு செய்து ஆண்டென்னாவை இன்ஸ்டால் செய்துவிட்டிருப்பான்னு கெஞ்சி அடுத்த நாளே வரச்சொன்னேன். இதற்குள், டிஷ் ஆண்டென்னாவை தூக்கி தூக்கி என் biceps ஒரு முறுக்கி ஏறி என்னையே பயமுறுத்தியது!

அவன் சொன்ன நாளும் வந்தது! ஏழு மணிக்கு வரவேண்டியவன் எட்டு மணிக்குத்தான் வந்தான்! அப்பவே எனக்கு ரத்தம் குபுகுபுவென்று கொதிக்க ஆரம்பித்துவிட்டது! வந்தவனை, நேராக வெளியில் கூட்டிச்சென்று, "அதோ பார்! அதான் வெளிச்சுவர்! அங்கே ஆண்டென்னாவைமாட்டிவிடு!" என்று ஆங்கிலத்தில் தான் சொன்னேன். அவன் என்னவோ, நான் சொன்னதை கேட்காமல், தரையில் பள்ளம் செய்து அதில்ஒரு தடி கம்பை நட்டுவைத்து அதில் மாட்டிவிடலாம் என்று அவனே ஒரு ஐடியாவை கிரியேட் பண்ணி, ஒரு அரை மணிநேரம் வேஸ்ட் செய்துகொண்டிருந்தான். இந்த அழகில் அவனுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை யாரோ செல்போனில் ஃபோன்! ஒவ்வொருமுறை வைக்கும்முன் "I love you honey!" என்று சொல்லிவிட்டு வைத்தான். எனக்கு அவனை Hate செய்யத்தோணிவிட்டது அவன் செய்யும் உடாலக்கடிகளை பார்த்து! கடைசியில் கொஞ்சம் பொறுமை இழந்து "Could you please install it on the wall? It is gettinglate!" என்று சொன்னதும், அவனுக்கு கொஞ்சம் சுரணை வந்து, ஏணியை போட்டு தானாகவே ஏறி ஆண்டென்னாவை இன்ஸ்டால் செய்துவிட்டு எந்த direction-இல் வைக்கவேண்டும் என்று கேட்டுவிட்டு, ஜஸ்ட் லைக் தட்-ஆக பொருத்திவிட்டான்!

முதல் முதலில் ஆண்டென்னாவை டியூன் செய்து பார்த்து வந்த நிகழ்ச்சி "அலைகள்"! ரொம்ப வருடம் கழித்து தமிழ் சீரியல் பார்ப்பதால்கொஞ்சம் ஆசையோடு கொஞ்ச நாள் பார்த்தேன்! அப்புறம் அலுத்துவிட்டது!

இப்போதெல்லாம், சன் டீவி பார்ப்பதற்க்கே பயமாக இருக்கிறது! பூனையை பார்த்து சூடு போட்டுக்கொண்டது போல, தமிழே ஒழுங்காய்வராத கம்பியர்களை இங்கிலீஷ் பேசவைத்து "confidence", "confident" இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் பேசுகிறார்கள்(அல்லது) பேத்துகிறார்கள்.

"ல" வை "ள" என்பதும்! "க" விற்க்கு பதிலாக "ஹ" ( "நிகழ்ச்சி" என்பது "நிஹ்ழ்ச்சி") என்பதும்! "ன" விற்கு பதிலாக "ண" என்பதும்! கொடுமைடா சாமி.
இதைப் பார்க்கும்போதெல்லாம் தில்லுமுல்லு சினிமாவில் "தேங்காய்" interview-விற்கு வந்திருக்கும் ஒருவரிடம் தமிழ் உச்சரிப்பைடெஸ்ட் செய்யும் காட்சி ஞாபகம் வந்து தொலைக்கும்!

No comments: